திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பெரம்பலுார் அருகே தனியார் பஸ் ஒன்று அதிவேகமாகவும், அளவுக்கு அதிகமாக ஏர் ஹாரன் அடித்தும் காரை மிரட்டும் வகையில் ஓட்டியுள்ளது. இதுகுறித்து பெரம்பலுார் மாவட்ட போலீசுக்கு ஐ.ஜி. தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் பஸ் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அறிவுரை வழங்கி, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.