பெரம்பலூர்: ரவுடி மீது வெடிகுண்டு வீச்சு; மேலும் இருவர் கைது

பெரம்பலூர் அருகே ரவுடி 'வெள்ளைக்காலி' மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில், மேலும் இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.  திண்டுக்கல்லில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, இரண்டு கார்களில் வந்த கும்பல் வெடிகுண்டு வீசியது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் கொலை முயற்சி கும்பல் தப்பிச் சென்றது. தற்போது  முனியசாமி,  வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அழகுராஜா ஏற்கனவே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடர்புடைய செய்தி