பெரம்பலூர் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் பிச்சைமணி தலைமையிலான போலீசார், பெரம்பலூர் -துறையூர் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள தனியார் கல்லூரி எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துக்கொண்டிருந்த, இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சிவக்குமார் மகன் பிரபு (19), குடிசை மாற்று வாரியம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் மகன் விஷ்ணு (18), கம்பன் நகரைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரவீன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.