சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ. 18. 10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். போக்குவரத்து (ம) மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி ஆகியோர் இந்த நிகழ்வை நேரலையில் பார்வையிட்டனர்.