பெரம்பலூரில் என் கல்லூரிக் கனவு ஆலோசனை முகாம்

பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 29.03.2025 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை பெரம்பலூர், துறையூர் ரோடு, தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர மாணவர்களுக்கு, "என் கல்லூரிக் கனவு" உயர் கல்வி வாய்ப்புகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து, தொழில் வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது. 

இம்முகாமில் கலந்து கொள்ளவரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தங்களின் EMIS எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் வரவேண்டும் எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி