வேப்பந்தட்டை: தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்த எம்எல்ஏ

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் கிருஷ்ணாபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 30.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி