அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிச் சீருடைகள், பாடநூல்கள் மற்றும் புத்தகப் பையை போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வழங்கினார்.
இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கள் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 429 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் 53,877 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிச் சீருடைகள், புதிய பாடநூல்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட உள்ளன என்றார்.