பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 1.70 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அடிக்கல் நாட்டி வைத்தார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.