பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்காநத்தம், அணைப்பாடி, கொளத்தூர், ஜெமீன் ஆத்தூர் மற்றும் நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், 05. 11. 2025 அன்று ரூ. 9. 43 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் ந. மிருணாளினி முன்னிலையில் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.