தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே, இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். உறுப்பினர் பதிவுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவைச் சான்றிதழ், போட்டோ, கைபேசி எண் கொண்டு வர வேண்டும்.
இந்த நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் வருகிற 10.06.2025 அன்று பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 11.06.2025 அன்று ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 12.06.2025 அன்று வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 13.06.2025 அன்று வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.