பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டர் அருண்ராஜை சந்தித்து நேற்று (ஜூலை 30) ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் வெளியே ஆட்டோக்கள் நிறுத்தும் இடமும், தள்ளுவண்டி கடைகளும் உள்ளன. இந்த நிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் கடைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்களும், தள்ளுவண்டி கடைக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே கடைகள் கட்டும் திட்டத்தை நகராட்சி கைவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.