இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த 1. வெங்கடேசன் (40/2003) 2. தங்கமணி (48/2003) ஆகியோரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்றப் பிரிவு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி நீதிமன்ற விசாரணையில் இருந்த இந்த வழக்கில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளிகளில் A1 வெங்கடேசன் இறந்த நிலையில், A2. தங்கமணி என்பவருக்கு 4 வாரங்கள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து சென்னை எழும்பூர் தலைமைப் பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.