பெரம்பலூர்: குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 21.03.2025 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் மங்களமேடு உட்கோட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவையூர் கிராமத்தில் மதியழகன் (45) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரியவந்த நிலையில் தனிப்படையினர் மற்றும் அவரது குழுவினர் மதியழகனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 2.325 கிலோகிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

மங்களமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இவ்வாறு தெரிவித்தார். இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.

தொடர்புடைய செய்தி