பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் ஹரிஹரன் (50) என்பவர் தனக்கு சொந்தமான மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்குப் புறம்பாக வைத்து விற்றது தெரியவந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து பாடாலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கொளஞ்சியப்பன் ஹரிஹரன் மீது வழக்குப் பதிவு செய்து அவரிடமிருந்து 1. விமல் பாக்கு (52 பண்டல் - 3,900 கிலோ) 2. வி1-பான் மசாலா (52 பண்டல் - 500 கிராம்) மொத்தம் – 4,400 கிலோ ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.