பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் வ. களத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மேட்டுச்சேரி கிராமத்தில் பால்ராஜ் (48) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்குப் புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து மொத்தம் 5.590 கிலோ கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.