பெரம்பலூர்: மாவட்ட எஸ்பியிடம் மதிமுகவினர் புகார் மனு

பெரம்பலூர் மாவட்ட ம. தி. மு. க. செயலாளர் ஜெயசீலன் தலைமையில், அக்கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேராவை சந்தித்து நேற்று (ஜூலை 30) ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், ம. தி. மு. க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம். பி. ஆகியோரை தஞ்சை மாவட்டம், வல்லம் பகுதியை சேர்ந்த பசீர் சமூக ஊடகங்களிலும், கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளையை சேர்ந்த நாஞ்சில் சம்பத் யூடியூப் சேனலிலும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி, காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை சேர்ந்த மல்லை சத்யா ஆகியோர் சமூக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், பொது வெளியிலும் எதிராக கருத்துகளை வெளியிட்டும், சாதி கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசி வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்கள் பேசிய கருத்துகளை சமூக ஊடகங்களிலும் யூடியூப் சேனலிலும் இருந்து நீக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி