இம்முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் சார்பு நீதிபதியுமான சரண்யா கலந்துகொண்டு பேசும்போது சமுதாயத்தில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரத்துவம், ஒருவருக்கொருவர் இணங்கிப் பழகுதல், சுற்றுப்புறத்தைப் பேணிப் பாதுகாத்தல், தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், கலாச்சாரம் மரபுகளை மதித்தல் இவை அனைத்தும் சமுதாய கட்டமைப்புகள் என்றும், தொழிலாளர்களாகிய தங்களுடைய உரிமைகளைக் கூறும்போது அதில் ஏதேனும் சட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் சட்டரீதியாக சந்திக்க நேரிட்டால் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை அணுகலாம். அதில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் உங்களுக்கு உரிய முறையில் சட்ட ஆலோசனைகள் வழங்க இருக்கின்றார்கள் என்றும், தொழிலாளர்களுக்கான சட்டங்கள் குறித்தும் சட்ட விதிமுறைகள் குறித்தும் உரிய முறையில் மனுவாக எழுதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அணுகலாம் என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி