குன்னம் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரம்பலூர் அருகே குன்னம் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் சாலையோர ஆக்கிரமிப்புகளே என நெடுஞ்சாலைத் துறையினர் கண்டறிந்தனர். ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், கடை மற்றும் கட்டிட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

எனினும், இன்று காலை முதல் கட்டமாக, பேருந்து நிலையத்திலிருந்து பெரியம்மாபாளையம் செல்லும் சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், கொட்டகைகள் மற்றும் சாலையோரக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி