பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கள்ளப்பட்டி கிராமத்தில் நேற்று (பிப்ரவரி 28) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தொடங்கி வைத்தார். முதலில் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர்.