பெரம்பலூரில் பாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த பாஜக மகளிர் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசிய போது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் பலாத்கார வழக்கில் ஞானசேகருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும், யார் அந்த சார் என்கிற நபரை தப்ப விட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆரம்பம் முதலாக யாரோ ஒரு நபர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்து வந்தது. 

ஒருவேளை அதனை மறைப்பதற்காகவே, மக்களுக்கு அதனை மறக்கடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த வழக்கை போலவே மகளிர்க்கு எதிரான அனைத்து குற்றங்களுக்கான வழக்குகளையும் எல்லாம் இதே வேகத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். 

இந்த வழக்கு ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டிருக்கிறது என்றால் மற்ற சாதாரணமான இருக்கக்கூடிய வழக்குகள் ஏன் இவ்வளவு விரைவாக முடிப்பதில்லை. அதனால் அத்தனை வழக்குகளையும் விரைவாக முடிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போழுதுதான் அது சாதனையாக இருக்கும். ஒரு வழக்கில் மட்டும் இதுபோன்று விரைந்து முடிப்பது என்பது சாதனையாகாது என்றார்.

தொடர்புடைய செய்தி