பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பழங்குடியினர் நலத்துறையில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம், மற்றும் அறிவியல் ஆகிய மூன்று பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ/ அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் 621212 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை 15. 07. 2024 பிற்பகல் 04. 00 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல்-2025 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி