இந்நிலையில் தினேஷ் சவுந்தர்யாவுக்கு குடும்பம் நடத்த எந்த உதவியும் செய்யவில்லை. இதனை கேட்ட சவுந்தர்யாவை தினேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளார். இதனால் தினேசை விட்டு பிரிந்த சவுந்தர்யா தனது குழந்தையுடன் கடந்த 2 ஆண்டுகளாக மேலப்புலியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவுக்கு தெரியாமல் தினேஷ் பெரம்பலூர் அருகே கல்பாடியை சேர்ந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் அந்த திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சவுந்தர்யா தனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்ட தினேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து தினேசை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்.