பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 2.37 லட்சம் மதிப்பீட்டில் 50,000 மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் நர்சரியை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.