கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பங்கேற்பு

கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பழுதடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல்" உள்ளிட்ட திட்டங்களின் கீழ் தேர்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகள் குறித்து கிராம மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலான சிறப்பு கிராம சபைக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் ஜூன் 30-ம் தேதி இன்று நடைபெற்றது.
இதில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் தெரணி ஊராட்சியில் நடைபெற்ற கிராசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம். கலந்துகொண்டார்
இன்றைய கிராம சபைக்கூட்டத்தில் "கலைஞரின் கனவு இல்லம்" 2024-25 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் பல்வேறு கணக்கெடுப்புகளின் மூலம் சேகரிக்கப்பட்ட வீட்டு வசதி தேவைகளுக்கான தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு "அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தில் கணக்கெடுப்பு விவரங்கள் கிராம ஊராட்சி அளவிலான குழு மூலம் கள ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டு தகுதியான பயனாளிகளின் பட்டியலை கிராம சபையில் அனைவருக்கும் தெரியும்வகையில் வாசித்து காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 145 மனுக்களை மாவட்ட ஆட்சியர், பெற்றுக்கொண்டார்.
ஒவ்வொருவரின் மனு மீதும் தனிக்கவனம் செலுத்தி சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி