நாமக்கல்லில் இருந்து டயர்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி, துறையூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் செஞ்சேரி பகுதியில் சென்டர் மீடியனில் ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று (27ம் தேதி) அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்தது. ஓட்டுநர் மனோஜ் மற்றும் கிளீனர் ராம்கி காயங்கள் ஏதுமின்றி தப்பினர். பெரம்பலூர் ரூரல் போலீஸ் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.