பெரம்பலூர்: ரூ. 47 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.47.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் 13.03.2023 அன்று தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க சித்தார்த்தன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் நல்லதம்பி, பெரம்பலூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அழகுவேல், பிரம்மதேசம் கிளை கழக நிர்வாகிகள், பல்வேறு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி