பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலை மற்றும் பொருட்களின் தரம், எடை இயந்திரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து பொருட்கள் அனைத்தும், தரமாக உள்ளதா, கிடைக்கப்பெறுகிறதா என்று பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார். கூட்டுறவுத்துறையின் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வர் மருந்தகங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், அதுகுறித்த விளம்பர சுவரொட்டிகளை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வைக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.