பெரம்பலூர்: மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை கலெக்டர் துவக்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பாடாலூரில், சென்னை –திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில், மியாவாக்கி முறையில் குறுங்காடுகளை உருவாக்கும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தொடங்கிவைத்தார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி