பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அசூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு அய்யனார் திருக்கோவிலின் 63-ம் ஆண்டு திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த மே 22 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில், தினந்தோறும் சுவாமி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் இன்று (மே 31) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.