பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 11 வழித்தடங்களில் பேருந்து வழித்தட நீட்டிப்பு மற்றும் புதிய பேருந்து போக்குவரத்து தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் கலந்துகொண்டு, ஓகளுர், அகரம்சீகூர், வயலப்பாடி, ஓலைப்பாடி, வேப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 8 நகர பேருந்துகள் மற்றும் 3 புறநகர் பேருந்துகளின் வழித்தடத்தை நீட்டிப்பு செய்து, பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.