பெரம்பலூர் அருகே காருகுடி கிராமத்தில் சுமார் நூறாண்டுகளாக உள்ள அய்யனார் கோயிலில், தகவல் தெரிவிக்காமல் இந்து சமய அறநிலையத்துறையினர் உண்டியல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை ஆண் காவலர்கள் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் பொதுமக்கள், காவல்துறை இடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. இதில் பெண்கள் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும், வயலுக்குச் சென்ற பெண்களையும் போலீசார் இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.