பெரம்பலூரில் விவசாயிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு

தமிழ்நாடு மின் பகிரமான கழகம் மற்றும் மத்திய திறனூக்க செயலகம் (BEE) இணைந்து 14/3/2025 பெரம்பலூரில் உள்ள ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் நடத்திய விவசாய மின் நுகர்வோர்களுக்கான மின் சிக்கனம், மின் திறன் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த வகுப்பில் மேகலா, மேற்பார்வை பொறியாளர் பெரம்பலூர் மற்றும் பரமேஸ்வரி, செயற்பொறியாளர் பொது மற்றும் அசோக்குமார், செயற்பொறியாளர் பெரம்பலூர், மற்றும் பெரம்பலூர் கோட்டத்தைச் சேர்ந்த அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

இதில் விவசாயிகளுக்கு மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக அதே சமயம் பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மின்சாரத்தை அலட்சியமாக கையாளும் போது ஏற்படும் மின் விபத்துகள் குறித்தும் காணொளி காட்சிகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 75 விவசாயிகள் பங்கு பெற்று பயன் அடைந்தனர். பயிற்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி