பெரம்பலூர்: குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்; உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 12.06.2025-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன் (தலைமையிடம்), பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியின்படி, இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும், உளமார உறுதிகூறுகிறேன் என்று உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி