பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் திமுக முறைகேடு: அதிமுக புகார்

பெரம்பலூர் அதிமுக செயலாளரும், மாவட்ட நிர்வாகியுமான இளம்பை இரா தமிழ்ச்செல்வன், கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். பெரம்பலூரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் ஈடுபடும் பூத் நிலை அலுவலர்கள் (BLO) திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதாகவும், குறிப்பாக பெரம்பலூர் 20-வது வார்டில் திமுக நகர்மன்ற உறுப்பினர் BLO இல்லாமல் வாக்காளர் பட்டியல் விண்ணப்பங்களை வழங்கி பூர்த்தி செய்து வருவதாகவும், இதனால் திமுகவினர் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி