மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 704 மனுக்கள் பெறப்பட்டன

பெரம்பலூர் மாவட்டம், குன்னம், சித்தளி, பேரளி, மூங்கில்பாடி, பெரியம்மாபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களுக்கு குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியம், தேவையூர், எறையூர், அனுக்கூர் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களுக்கும் அனுக்கூர் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று(ஆக.28) நடந்தது.

முகாமினை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீதான நடவடிக்கைகளை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தினார். குன்னம் முகாமில் 395 மனுக்களும், அனுக்கூர் முகாமில் 309 மனுக்களும் என மொத்தம் 704 மனுக்கள் பெறப்பட்டன.

அனுக்கூரில் நடந்த முகாமில் மனு அளித்த 6 பயனாளிகளுக்கு உடனுக்குடன் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையினையும், 3 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளி பயனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியினையும், 6 பயனாளிகளுக்கு வருவாய்துறை தொடர்பான சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

இதில் சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கார்த்திக்கேயன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) சென்னகன்ணன், தாசில்தார் கோவிந்தம்மாள் மாயகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் செல்வகுமார், செல்வமணி அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி