பெரம்பலூர்: ஆடு திருடிய 3 பேர் போலீசில் ஒப்படைப்பு

பெரம்பலூர் மாவட்டம் கைப்பெரம்பலூர் கருப்பட்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தேவி (45) என்பவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 நபர்கள் ஆடுகளைத் திருடி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஆடு திருடிய ஆகாஷ் (25), கருப்பையா (19), செந்தில் (38) ஆகியோரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். 

இதில் கொடியரசு என்பவர் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடிய 3 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் தப்பிச் சென்ற கொடியரசுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி