மிளகு விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்வு

கேரளாவின் வேளாண் சந்தையில், 'கருப்பு தங்கம்' என்று போற்றப்படும் மிளகின் விலை சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு கிலோ மிளகு ரூ.750 முதல் ரூ.900 வரை விற்பனையாகிறது. கடுமையான காலநிலை மாற்றம் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி குறைந்ததும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும். சந்தையில் தேவை அதிகரித்து வருவதால், விரைவில் ஒரு கிலோ ரூ.1,000 என்ற இலக்கை எட்டும் என விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕