"உலகம் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. முதலில் கொரோனா, பின்னர் போர், இன்று எரிசக்தி நெருக்கடி” என பிரதமர் மோடி நெதர்லாந்தில் பேசியுள்ளார். மேலும், “இந்த தசாப்தம் சவால்கள் நிறைந்ததாக மாறி வருகிறது. இந்தச் சூழ்நிலைகள் விரைவாக மாறவில்லை என்றால், கடந்த பல தசாப்தங்களில் செய்த சாதனைகள் வீணாகிவிடும். உலகின் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் மூழ்கிவிடுவார்கள்” என கூறியுள்ளார்.