சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால், 200 மீட்டருக்கும் மேல் நீண்ட வரிசை காணப்பட்டது. பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாகக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகளிடம் நேரில் மனு அளித்தால் விரைந்து தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீண்ட நேரம் காத்திருந்த பலர், உள்ளே செல்ல அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.