ஈரானில் போர் காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள சிறிய பொருட்களைக் கூட விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலை முடி, காலியான வாசனை திரவிய பாட்டில்கள், பயன்படுத்திய துணிகள் உள்ளிட்ட பொருட்களை மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். பணத் தேவையை சமாளிக்க மக்கள் தங்களிடம் உள்ள பொருட்களை வருமான ஆதாரமாக மாற்றி வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.