HMPV வைரஸ் கட்டுப்படுத்தக் கூடியது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியவும். இருமல், தும்மல் வரும்போது வாய், மூக்கு பகுதிகளை மூடிக் கொள்ள வேண்டும். இருமல், தும்மல், காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.