மக்கள் நாயகன் லெப்டினன்ட் கர்னல் ஜம்வால் காலமானார்

இந்திய தேசத்திற்காக எண்ணற்ற போர்களில் களம் கண்ட லெப்டினன்ட் கர்னல் ஜம்வால் (100), வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். பிரிட்டிஷ் இந்திய ராணுவம் மற்றும் இந்திய ராணுவம் இரண்டிலும் பணியாற்றிய ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக, 1947-48 இந்தோ-பாக் போரின்போது, கடினமான சோஜிலா கணவாயைக் கடந்து எதிரிகளைத் தாக்கிய இவர், நாட்டைக் காத்த ஒரு உண்மையான நாயகனாக போற்றப்படுகிறார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி