சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். பைக், கார், பேருந்து, ரயில், விமானம் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதன் காரணமாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் 4 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று மட்டும் 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி