பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த சாலைகள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, பரனூர் சுங்கச்சாவடி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். தற்போது அவர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருவதால் சென்னையே ஸ்தம்பித்துள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி