முதலமைச்சர் விஜய்யின் சொந்த தொகுதியான சென்னை பெரம்பூரில், கடந்த 6 நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுங்கையூர், எம்.கே.பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலி குடங்களுடன் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்த பொதுமக்கள், விரைவில் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்படும் என்ற உறுதியளிப்பை அடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.