60 ஆண்டுகள் பழமையான அரச மரம் வெட்டப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

சென்னை பல்லாவரம் பகுதியில் முறையான அரசு அனுமதியின்றி 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் ஒன்று வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பொதுமக்கள் மற்றும் மக்கள் இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சாலையில் வெட்டி சாய்க்கப்பட்டு கிடந்த மரத்திற்கு பால் ஊற்றி, மாலை அணிவித்து, அழுது ஒப்பாரி வைத்து பொதுமக்கள் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். சுற்றுச்சூழலை சீரழிக்கும் வகையில் பழமையான மரத்தை சட்டவிரோதமாக வெட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕