விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் நடைபெற்றது. புதிய உறுப்பினர்களை கட்சியில் வரவேற்ற அவர், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளால் ஈர்க்கப்பட்டு பலர் கட்சியில் இணைந்து வருவதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.