காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறியதை நம்பி சுற்றுலா சென்ற மக்கள் உயிரிழந்தது தான் மிச்சம் என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். லோக் சபாவில் "ஆபரேஷன் சிந்தூர்" விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பிரதமர், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் பொறுப்பல்லவா? என கேள்வி எழுப்பினார். மேலும், முப்படைகளின் தீரத்திற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.