மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்துப் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே அங்குக் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில், நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் இந்த போராட்டத்தில் குதித்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை மாற்றுப் பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
நன்றி: பாலிமர்