தேர்தல் வெற்றி மற்றும் தோல்விகளுக்கு அப்பாற்பட்டு எப்போதும் மக்களுடன் உறுதியாக நிற்கும் ஒரே கட்சி திமுக மட்டுமே என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போதுதான் ஒரு டம்மி முதலமைச்சரை பார்ப்பதாகவும், மாநிலம் முழுவதும் மின்வெட்டும் விலைவாசி உயர்வும் மக்களை பாதித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவிற்கு பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றி:பாலிமர்